தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II 2022 ம் ஆண்டிற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்Paper-I and Paper-II ஆகிய தாள்களுக்கு, தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன என்று அறியவுறுத்தப்பட்டுள்ளது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
தேர்வில் பங்கேற்ப்போருக்கு உரிய விண்ணப்ப கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ,250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை 7ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…