வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில் வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மற்றும் சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவில் வரும் மற்ற எல்லா சமூகங்களுக்கும் 2.5 % வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.MBC – V என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வழி வகை செய்கிறது.6 மாதங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்றும் அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…