TamilNadu CM MK Stalin [File Image]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.
ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த மாநில மகளிர் கொள்கையில் , பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிப்பது,
19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் , கல்வி இடைநிற்றல் காரணமாக படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்வது, அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டது.
கடந்த டிசம்பர் 2021இல் மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவான விவரங்கள் வெளியாகி தற்போது அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…