பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்.. மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு.!

TamilNadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையிலான குழு இந்த கொள்கையை வடிவமைத்துள்ளது.

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த மாநில மகளிர் கொள்கையில் , பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  33 சதவீத இடஒதுக்கீட்டை அரசு, தனியார் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவது, கிராமப்புறங்களில் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கூடுதலாக 50 நாட்கள் நீட்டிப்பது,

19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் , கல்வி இடைநிற்றல் காரணமாக படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்வது, அரசு தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 2021இல் மாநில மகளிர் கொள்கை வெளியிடப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவான விவரங்கள் வெளியாகி தற்போது அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்