தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை, இன்று வெளியீடு.!
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று, தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை தமிழக அரசால் வெளியிடப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், சர்வதேச மகளிர் தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்துச்செய்தியில், “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு, மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே” என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம் என்று கூறியுள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிடப்படுகிறது. சமஉரிமை, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்த மாநில மகளிர் கொள்கை வெளியிடப்படுகிறது. மகளிரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.