தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 வெளியீடு!

Women's Policy

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் ஆகியவை மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல் உள்ளிட்டவைகளும் மகளிர் கொள்கையில் உள்ளன.

போதிதர்மருக்கு மணிமண்டபம்.! கோரிக்கை வைத்த திமுக எம்.எல்.ஏ.!

மேலும், மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல், மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவையும் உள்ளன. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும்.

இதன் பொருட்டு, பாலின வேறுபாட்டினை களைந்திடவும், பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திடவும், பெண்களின் நிலையினை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி,  அவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழச் செய்துள்ளது.

தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இம்மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்