தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம் – முதலமைச்சர் இரங்கல்

Default Image

தமிழ்நாடு ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என முதல்வர் இரங்கல். 

நேற்று அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் பறந்த போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

தமிழக வீரர் மறைவு 

இந்த நிலையில், விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு விமானியும் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் தேனீ மாவட்டம், ஜெயமங்கலத்தை சேர்ந்த விமானி மேஜர் ஜெயந்த் உயிரிழந்துள்ளார்.

முதல்வர் இரங்கல் 

இந்த நிலையில் தமிழக வீரர் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாடு ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்