தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பணிகளை நிரப்புவதற்காக வருகின்ற 11, 12 -ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்த தேதிகள் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு தேதிகளில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12-ம் தேதியும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என இருந்தது.
சமீபத்தில் சார்பு ஆய்வாளர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.இந்நிலையில் எழுத்துத் தேர்வு தேதிகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதாவது காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு தேர்வு மையம் மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…