ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது-மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில் ,ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது.இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
இந்த திட்டம் தொடர்பாக 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாக கருத்து கேட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.