திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி நாளை பேச்சுவார்த்தை.!
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி நாளை பேச்சுவார்த்தை மேற்கொள்கிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, ஐ.யூ.எம்.எல் 3, எம்.எம்.கே. 2, சிபிஐ 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மீதமுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக நாளை பேச்சுவார்த்தை மேற்கொள்கிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், விரைவில் அதற்கான உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.