தற்கொலையில் தமிழகம் 2-ம் இடம்..! ஆய்வில் அதிர்ச்சி.!

Default Image

இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடம்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, 2018 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 516 பேரும், 2017ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 887 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 42 ஆயிரத்து 480 பேர் விவசாயிகள் ஆகும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகராஷ்டிரா உள்ளது இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. கடந்தாண்டு மகாராஷ்டிராவில் 18,916 பேரும் தமிழகத்தில் 13 ஆயிரத்து 493 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மேற்கு வங்கம் ,மத்திய பிரதேசம் கர்நாடகா மாநிலங்கள் உள்ளது.

கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் 3.7 சதவீதம் பேர் பட்டதாரிகள். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் வரிசையில் 16 தற்கொலைகள் உடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு நாட்டிலேயே சென்னையில் நகரில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 2018 ஆம் ஆண்டு 2,102 பேரும் செய்த நிலையில் கடந்த ஆண்டு 2,461பேர் தற்கொலை செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஆண்டு 2,423 வெறும் பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில் ஆயிரத்து 229 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்