‘நிதி ஆயோக்’ சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம்..!
இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது.
இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியல் தயாரித்துள்ளது. இந்த பட்டியல், சுகாதார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவுகோல் அடிப்படையில் நான்காவது ஆண்டாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் கேரளாவும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.