தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது.
அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் திண்டுக்கல், விருதுநகர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து இன்று காலை 10 வரை திருநெல்வேலி, கன்னியகுமார், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று மகளிர் உரிமை தொகை… போனை செக் பண்ணிக்கோங்க..!
இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.