தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…!சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.