எப்போது குருப்-1 முதல்நிலைத் தோ்வு..!வெளியானது அறிவிப்பு…
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தேதி குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டதாவது:
குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது தோ்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெறும். என்றும் இதே போல் தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநா் மற்றும் உதவி கண்காணிப்பாளா் காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தோ்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.