Vitamin A: வைட்டமின்-ஏ சத்து குறித்த விழிப்புணர்வு.! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழ்நாடு சுகாதாரத்துறை.!

TN Health Department

வைட்டமின் – ஏ சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களும் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து, வெற்றிகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக, சுகாதார சேவைகள் துணை இயக்குநர்கள் மற்றும் பிற இரண்டாம் நிலை அலுவலர்கள் விழிப்புணர்வை மேற்பார்வையிட வேண்டும். மேலும், வைட்டமின் – ஏ விழிப்புணர்வு மதிப்பீட்டிற்காக தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 கிராமங்கள் அல்லது வார்டுகளில் டிப்ஸ்டிக் கணக்கெடுப்பு நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமங்களில் உள்ள வார்டுகளில், 6 முதல் 60 மாதம் வரையில் இருக்கும் 15 குழந்தைகள் ஆய்வில் உட்படுத்த சுகாதார சேவைகள் துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 25ம் தேதிக்குள் கள ஆய்வு நடத்தி அதன் விவரங்களை 30ம் தேதிக்குள் பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களும் மாவட்ட அளவிலான நுண் திட்டம் வைட்டமின்-ஏ முகாம் விவரங்களை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்