பொறுப்பேற்றுக்கொண்டார் மத்திய கலால் வரி (ம) ஜிஎஸ்டி தலைமை ஆணையர்…

Default Image

இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் சேவைகள் துறையின்  1987-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜி.வி.கிருஷ்ணா ராவ், அவர்கள்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய கலால் வரி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக  நேற்று பொறுப்பு ஏற்றார்.இவர் குறித்த சிறப்பு தொகுப்பு.

கல்வி:

  • இவர், ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த பின், 
  • இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளையும் படித்துள்ளார்.
  • இதுதவிர சைபர் சட்டம் மற்றும்
  • அறிவுசார் சொத்துரிமை படிப்பில் முதுகலை பட்டயப்படிப்பும்,
  • இதழியல் மற்றும்
  • ஜோதிடத்தில் முதுகலை படிப்பும் நிறைவு செய்திருக்கிறார்.

வகித்த பதவிகள்:

  • இவர், மைசூரில் கமிஷனர் மற்றும் முதன்மை கமிஷனராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை கடந்த 2017-ம் ஆண்டு வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கான கருவியாக திகழ்ந்துள்ளார்.
  • கவுகாத்தியில் செயல்பட்டு வரும் 7 வடகிழக்கு மாநிலங்களின் சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் தலைமை கமிஷனராக இருந்தார்.
  • 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் சென்னையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
  •  அவருடைய இந்த பொறுப்பில், வரி செலுத்துபவர்களுக்கான சேவைகள், வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது.
  • மேற்கண்ட தகவல் மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் அலுவலகத்தின் கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்