தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு – சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக 1,299 எஸ்.ஐ. பணி இடங்களுக்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Police Recruitment

சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 – 30 வயதுக்குள் இருப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு ரூ.36,900 – ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும். மேலும், இந்த பணி இடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு : 53 SC & ST பற்றாக்குறை காலிபணியிடங்களின் விவரம் தகவல் சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு:

துறை ஒதுக்கீடு தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20% காலி பணியிடங்கள்.
சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு- மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (9% +13 விளையாட்டு ஒதுக்கீடு – மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (7%+3%) பற்றாக்குறை காலிப்பணியிடங்களுக்கு பொருந்தாது.

வகுப்புவாரி இடஒதுக்கீடு

தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், பற்றாக்குறை காலிபணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சேவை செய்யவும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இந்த தேர்வுக்கு தயாராக வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு TNUSRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்