ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி..!
நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.