ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அதன் இயக்குநர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதால், தமிழ்நாடு காவல்துறை இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டுக்கு டிரேடிங் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆருத்ரா நிறுவன முக்கிய இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல்ராஜ் உள்ளிட்டோர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆருத்ரா வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் நடிகர் ஆர்கே.சுரேஷ் துபாயில் பதுங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…