அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்கள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து.
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘அர்ஜுனா விருதுக்கு-க்குத் தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்!’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள மேஜர் தயான் சந்த் அவர்களுக்கும், அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த –
17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா #ArjunaAwards2022-க்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.மிக இளம் வயதிலேயே இத்தகைய அங்கீகாரம் பெற்றுள்ள அவருக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! pic.twitter.com/aM0111MuHY
— M.K.Stalin (@mkstalin) November 14, 2022