கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா பதக்கப் பட்டியலில் 18 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆறாம் நாளான நேற்று ஆடவர் மற்றும் மகளிருக்கான ஸ்குவாஷ் குரூப் போட்டிகள், 400மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் ஆகிய தடகள போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
கேலோ இந்தியா – தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை!
தற்போது, பதக்கபட்டியலில் மகாராஷ்டிரா 25 தங்க பதக்கத்தையும், 21 வெள்ளிப் பதக்கங்களையும், 26 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
கேலோ இந்தியா – ஒரே நாளில் தமிழகத்துக்கு 6 தங்கப்பதக்கம்!
அடுத்தபடியாக, ஹரியானா 18 தங்கம், 11 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 17 தங்கம், 8 வெள்ளி 23 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…