உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரருக்கு தங்கம்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற வரும் உலக ஆணழகன் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.இவரைத்தொடர்ந்து ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
சீனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.12 வது WBPF உலக சாம்பியன்ஷிப் 2021 போட்டி அக்டோபர் 1 முதல் 07 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.