தமிழகத்தில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை.!
தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி:
மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நவ.23ம் தேதி முதல், தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்த வகையில், வங்கக்கடலில் சென்னையில் இருந்து 1200 கி.மீ தொலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
AS PER IMD,
Under influence cyclonic circulation ,a low pressure area is very likely to
form over central parts of South Bay of Bengal on 23.11.20. a depression over Southwest Bay of Bengal and move SrilankaTamilnadu coast during 48 hours.
TNSDMA— TN SDMA (@tnsdma) November 21, 2020
6 மாவட்டங்களுக்கு கனமழை:
நாளை மறுநாள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rainfall Warning
As per IMD, Heavy rain is likely to occur at isolated places over Nagapattinam, Thanjavur, Tiruvarur, Pudukottai, Sivagangai and Ramanathapuram districts on 23.11.20.
—-TNSDMA— TN SDMA (@tnsdma) November 21, 2020
5 மாவட்டங்களுக்கு கனமழை:
அதே நேரத்தில், நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம்-புதுவை கரையை நெருங்கும் எனவும் நவம்பர் 24 ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.