மன்னிப்பு கேட்ட தமிழக அதிகாரிகள் – அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

Default Image

பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு  தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகள் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில், பணி மூப்பு பட்டியலை தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதேபோல உச்சநீதிமன்றமும் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு  அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்க முடியாது என தெரிவித்திருந்தது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நீதிபதி இல்லாததால் இன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தமிழக அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
Mushfiqur Rahim
Ilaiyaraja
TN CM MK Stalin
MNM Leader Kamal haasan - TN BJP Leader Annamalai
blue ghost mission 1