கட்பெட்டு வனச்சரகத்தில் கருஞ்சிறுத்தை இறப்பு… வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..

Published by
Kaliraj

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக நீலகிரி கட்பெட்டு  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த சரக உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  அதில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை பரிசோதனை செய்து  ஆய்விற்குட்படுத்தினர்.இதில், இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கருஞ்சிறுத்தை இறப்புக்குறித்து வனத்துறை அதிகாரிகள் கூரியதாவது, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடக்கோடு பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை ஆய்வு செய்து ஆய்வு மாதிரிகளை எடுத்துள்ளனர். இந்த கருஞ்சிறுத்தை  நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில கருஞ்சிறுத்தைகள் மட்டுமே வாழ்கின்றன. அதில்,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பை பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை  விஷம் வைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Kaliraj

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

2 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

3 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

5 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

5 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

6 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

7 hours ago