“தமிழ்நாட்டின் தேவை விரைவில் பூர்த்தி” – ஓ.பன்னீர்செல்வம்..!

Published by
Edison

தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை அரசு பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

திருவள்ளுவரின் வாக்கு:

உணவுப் பஞ்சமும், தொற்று நோய்களும், அந்நியர்களின் படையெடுப்பும் வராதபடி நடத்தப்படுகிற நாடே நல்ல நாடு என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவற்றை செயல்படுத்தும் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதன் அடிப்படையில், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொடுந்தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி:

ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி (Two Doses) என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 16 கோடி தடுப்பூசி மருந்துகள்  தேவைப்படுகின்றன. 26-06-2021 அன்று காலை நிலரவப்படி, மொத்தம் 1,44,83,205 தடுப்பூசிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகள்:

இந்தச் சூழ்நிலையில்,தனியார் மருத்துவமனைகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் விநியோகிக்கப்பட்ட 13.9 இலட்சம் மருந்துகளில், எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், ஜூலை மாதத்திற்கு 71.5 இலட்சம் மருந்துகளை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்றும், இதில் 17.75 இலட்சம் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே, எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில் ஜூலை மாதத்திற்கென்று மேலும் 17.75 இலட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

அரசு மருத்துவமனைகள்:

பொதுவாக மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்குக் காரணம்.அங்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதும், இணையதளத்திற்கு சென்று எந்தவிதமான பதிவும், முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாக தடுப்பூசி செலுத்துகின்ற வசதி உள்ளதும் தான். இதுமட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமுதாயநலக் கூடங்கள் போன்றவற்றில் இலவச தடுப்பூசி முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை கட்டணம்:

அதேசமயத்தில், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தக்கூடிய நிலை இருக்கின்றது. இதுதவிர, முன்பதிவு அவசியம் என்ற நிலைமையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் காரணங்களால், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாத தடுப்பூசி மருந்துகள் இலட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள பயன்படுத்தப்படாத மருந்துகளை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தமிழ்நாட்டின் தேவை விரைவில் பூர்த்தி:

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.இதன்மூலம் தமிழ்நாட்டின் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

Published by
Edison

Recent Posts

விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!

விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!

சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…

16 minutes ago

விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…

47 minutes ago

விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!

கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…

1 hour ago

“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…

2 hours ago

ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,

கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…

3 hours ago

INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…

3 hours ago