தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் !மதுப்பிரியர்கள் கடும் அவதி !எம்எல்ஏ தனியரசு கோரிக்கை
சட்டப்பேரவையில் எம்எல்ஏ தனியரசு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் என்று கூறினார்.
மேலும் வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார் ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி என்று எம்எல்ஏ தனியரசு பேசினார்.