விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்.!
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை.
புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதால் எம்பிக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனிமொழி, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவசாயிகளை சந்திக்க பேருந்தில் சென்று சிறிது தொலைவு முன்பே பேருந்தை நிறுத்திவிட்டு, நடை பயணமாக சென்றுள்ளனர். மல்லிகார்ஜீன் கார்கே, அர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் சாலையில் போலீசார் பதித்து வைத்திருந்த ஆணிகளை அகற்றியுள்ளனர். தமிழக எம்பிக்கள் தடுத்த நிறுத்தப்பட நிலையில், அணிகளை விவசாயிகள் அகற்றுவதாக கூறப்படுகிறது. மேலும், தடுப்பு வேலிகளையும் அகற்ற விவசாயிகள் முற்படுகிறார்கள் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார். அதில், போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது. அவர்கள் பிரச்சனையை கேட்டறிய டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்று பதிவிட்டுள்ளார்.
போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது. அவர்கள் பிரச்சனையை கேட்டறிய டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன். pic.twitter.com/rHXCGrBdFN
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 4, 2021