டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேரும் தற்போது அடுத்தடுத்து பதவி ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர்.
மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த் தமிழில் பதவியேற்று கொண்டு முடித்த பிறகு தளபதிபதியார் வாழ்க என்றும், எங்கள் வருங்காலம் உதயநிதி என்றும் முழக்கமிட்டார். அடுத்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் தமிழில் பதவியேற்று கொண்ட பிறகு தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக என முழக்கமிட்டார் .
விசிக எம்பி ரவிக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்று கொண்ட பிறகு, வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார் , வாழ்க எழுச்சி தமிழர் என முழக்கமிட்டார். விசிக தலைவர் திருமாவளவன் தமிழில் பதவியேற்ற பிறகு வாழ்க இந்திய அரசியலமைப்பு சட்டம், வாழ்க தேசிய ஒருமைப்பாடு என முழக்கமிட்டார்.
மேலும், மற்ற திமுக எம்பிக்கள் பதவியேற்றுக்கொள்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சிலரும் குறிப்பிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழக எம்பிக்கள் பெரும்பாலும் அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்று வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…