நீட் எதிர்ப்பு.., தமிழ் வாழ்க.! அனல்பறந்த தமிழக எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு..!  

MPs

டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேரும் தற்போது அடுத்தடுத்து பதவி ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர்.

மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த் தமிழில் பதவியேற்று கொண்டு முடித்த பிறகு தளபதிபதியார் வாழ்க என்றும், எங்கள் வருங்காலம் உதயநிதி என்றும் முழக்கமிட்டார். அடுத்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் தமிழில் பதவியேற்று கொண்ட பிறகு தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக என முழக்கமிட்டார் .

விசிக எம்பி ரவிக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்று கொண்ட பிறகு, வாழ்க அம்பேத்கர்,  வாழ்க பெரியார் , வாழ்க எழுச்சி தமிழர் என முழக்கமிட்டார். விசிக தலைவர் திருமாவளவன் தமிழில் பதவியேற்ற பிறகு வாழ்க இந்திய அரசியலமைப்பு சட்டம், வாழ்க தேசிய ஒருமைப்பாடு என முழக்கமிட்டார்.

மேலும், மற்ற திமுக எம்பிக்கள் பதவியேற்றுக்கொள்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சிலரும் குறிப்பிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழக எம்பிக்கள் பெரும்பாலும் அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்