தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு.
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட, உரிமைகளைப் பாதுகாக்க 1989-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு 2010-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது.
தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் நல ஆணைய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில சிறுபான்மைய ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார். ஆணை துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் மஸ்தான் உள்பட உறுப்பினர்கள் 6 பேரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
உறுப்பினர்கள் ஏ.பி.தமீம், அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டாக்டர் எஸ்.டான்பாஸ்க்கோ, டாக்டர் எம்.இருதயம் மற்றும் பிக்கு மௌரியார் புத்தா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, 1989, 1991 சட்டசபை தேர்தல்களில் தென்காசி தொகுதியில் இருந்தும் 2006-ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பீட்டர் அல்போன்ஸ். இவர் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சிறுபான்மையினர் மீது முதலமைச்சர் பேரன்பு கொண்டுள்ளார்; சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் என்றும் சிறுபான்மையினர் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…