முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யும் தமிழக அமைச்சர்கள்..!
முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1,644 ஏரிகளில், 256 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாகவும், 205 ஏரிகள், 75 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.