ஆளுநர் ரவி ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுகிறார்.! அமைச்சர் பொன்முடி குற்றசாட்டு.!

Default Image

ஆளுநர் ரவியின் செயல்பாடு குறித்தும், தமிழக பாஜக செயல்பாடு குறித்தும் தனது கண்டன அறிக்கையை தமிழக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து தனது கண்டன அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளார். அதில், பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு அதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்து உள்ளார்.

கார்ல் மார்க்ஸ் : ஆளுநர் ரவி அண்மையில் ஒரு விழாவில் பேசுகையில், கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியிருந்தார். கால் மார்க்ஸின் கருத்து இந்தியாவை சிதைத்துள்ளது என்று அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வெளியாகின. இதனை குறிப்பிட்டும் பல்வேறு சம்பவங்கள் நினைவு கூர்ந்தும் இந்த கண்டன அறிக்கையை அமைச்சர் பொன்மொழி குறிப்பிட்டு உள்ளார்.

கட்சி பிரமுகர் ஆளுநர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்திற்கு பொதுவானவராக செயல்படாமல் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் போலவே செயல்பட்டு வருகிறார் எனவும், இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக சனாதன கொள்கை பேசி வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

கண்டனம் : மேலும்,  அவர் கல்வி நிலையங்களில் பேசுகையில் தேவையற்ற கருத்துக்களை வெளிப்படுத்தி அதன் மூலம் எதிர் விமர்சனங்களை ஆளுநர் எதிர் கொண்டு வருகிறார் எனவும், மேலும் தமிழ்நாடு என சொல்லக்கூடாது தமிழகம் என்று சொல்ல வேண்டும் எனவும் உளறி தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

ராணுவ வீரர் மரணம் : மேலும் அண்மையில் கிருஷ்ணகிரியில், குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் குடும்பத்தினர் உடன் நடந்த தகராறில் ராணுவ வீரர் பிரபு என்பவர் உயிரிழந்தார். இதில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்துள்ளார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் ஆளும்கட்சி கவுன்சிலர் என்பதை தவிர வேறு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது.

குண்டு வைப்போம் : இந்த ஆனால் இந்த சம்பவத்தையும் தேசபக்தியையும் அரசியல் வியாபார பொருளாக்கி பாஜக  செயல்பட்டு வருகிறது. அதன் பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், ஒரு ராணுவ வீரர் பேசுகையில் தமிழ்நாட்டில் குண்டு வைக்கும் சூழல் வரும் என சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் ஒரு முன்னாள் ராணுவ வீரர்  பேச வைக்கப்பட்டுள்ளார். என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார் அமைச்சர் பொன்முடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்