போலி பத்திரங்கள் குறித்த முக்கிய சட்டம் விரைவில்… தமிழக அமைச்சர் தகவல்.!
போலி பாத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளருக்கு இருக்கும் வண்ணம் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். – பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் இணையதள சேவை பாதிப்பு இருப்பதாக புகார் எழுந்தாது. அதன் காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பத்திரப்பதிவு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ‘போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. போலி பாத்திரங்கள் எப்போது பதிவு செய்திருந்தாலும், அது ரத்து செய்யப்படும். போலி பாத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளருக்கு இருக்கும் வண்ணம் சட்டம் விரைவில் அமலுக்கு வரும்.’ என தெரிவித்தார்.