தமிழக அமைச்சருக்கு சிறைத்தண்டனை…! மேல்முறையீடு செய்ய முடிவு …!

Published by
Venu

வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்று  அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

1998ல் பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி ஆகும்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறுகையில்,நான் வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும்.அதேபோல் திமுக என் மீது பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளது.

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்கு ஆகும் . வேறொன்றும் இல்லை என்று  அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

22 mins ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

1 hour ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

3 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

3 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

3 hours ago