தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டெல்டாவை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை…!!!
டெல்டா மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேம்டும் எனவும், அந்த பகுதிகளுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நேரில் சந்தித்து நிதி வழங்கினார். தமிழகத்தை மட்டும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.