மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை ! இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

Published by
Venu

தமிழக அரசின் அலுவல் ஆய்வுகூட்டம் இன்று  (மார்ச் 2-ஆம் தேதி) நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தொடர் நடைபெற்றது.கடைசி நாள் கூட்டத்தில் , வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். எனவே தமிழக சட்டபேரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் அலுவல் ஆய்வுகூட்டம்  இன்று  ( மார்ச் 2-ஆம் தேதி )காலை 9 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது.

 

Published by
Venu
Tags: #TNAssembly

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

8 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

8 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

11 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

12 hours ago