தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
2023-ஆம் ஆண்டின் தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அருகருகே அமர்ந்துள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றி வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். மேலும், ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.