தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது.! பட்ஜெட் குறித்து விவாதம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது.
கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பிப்.25 இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இதில், 25,26 தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறு என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி-27ல் சித்த வைத்தியர் சிவராஜ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் விருதுநகரில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்து வருகிறார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025