தமிழக சட்டப்பேரவை -இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் , பதிலுரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்தலும் , நிறைவேற்றுதலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.