தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!

Default Image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மதுரை ஆதீனம் உள்பட 5 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்.

தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. 4 நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19-ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதிலுரையாற்றுவர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மதுரை ஆதீனம் உள்பட 5 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பெரியாரிய சிந்தனையாளர் ஆனைமுத்து, மருத்துவர் காமேஸ்வரன் மற்றும் ஸ்டேன் சுவாமி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு, முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேர் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், அய்யாறு வாண்டையார், விஜயசாரதி, நன்னிலம் கலையரசன், மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்