தமிழக சட்டப்பேரவை தேர்தல்! வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு!

Default Image

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி. 

2021-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு, இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் அணைத்து வேலை நாட்களிலும் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற 21,22-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும், இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்