தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கடந்த 13-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுவரை நடைபெற்றது.
இந்த, இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசவுள்ளார். வரும் 23ம் தேதி முதல் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடரும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இன்று நடக்கும் சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. மேலும் , சட்டமன்றத்தில் இன்று புளியந்தோப்பு குடியிருப்பு முறைகேடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழும்பூர் திமுக உறுப்பினர் பரந்தாமன் கொண்டு வந்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…