தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடமில்லாத நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் கொரோனா குறித்தும், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்தும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…