இன்று பிற்பகலில் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இதில், 25,26 தேதிகளில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.4:30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள சூழலில் 3 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதால், சட்டப்பேரவை கூட்டத்தொடரை இன்றே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.