தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (மாா்ச் 17) தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம்நடைபெறுகிறது.

Tamil Nadu Budget 2025

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இது திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட்டாகும், மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில் சட்டமன்ற அமர்வு தொடங்குகிறது. இன்றைய நாளில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், வரி மாற்றங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து திமுகவினரும் எதிர்க்கட்சியினரும் விவாதிக்கவுள்ளனர்.

குறிப்பிக்க, அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை விமர்சிக்கவும், அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பவும் தயாராக உள்ளன. அதன்படி, சட்டம்-ஒழுங்கு, கடன் சுமை மற்றும் மத்திய அரசிடமிருந்து நிதி பங்கீடு குறைவது போன்ற பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி விவாதம் நடைபெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய விவாதத்தில், ஒரு பக்கம் திமுக அரசு தங்களது சாதனைகளை பற்றி விவரிக்க, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அரசை கேள்வி கேட்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த விவாதங்களுக்கான பதிலுரை வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) அளிக்கப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்