தமிழக சட்டப்பேரவை – 10 வது நாளாக இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது, கேள்வி நேரத்திற்கு பின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், மெய்யநாதன் வெளியிடுகின்றனர். தமிழக்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என்று ஒரு புதிய துறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே, வனத்துறையுடன் சேர்த்து இருந்த இந்த துறையானது, இந்த முறை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த துறையின் எதிர்கால நோக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை, அதற்கான தொலைதூர திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளது.