காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம் ..!
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு அங்கிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த காவிரி ஆற்றின் நீரை சேமித்து வைக்கும் பொருட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் ஆணை, கல்லணை, மேலணை ஆகியவை உள்ளன. இந்த இரு மாநிலங்களும் இந்த நீரை பகிர்ந்து வருவதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, டெல்லி சென்று பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணைக்கு அனுமதி மறுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். மேகதாது அணையை குறித்த அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடுவது விதிமீறல் ஆகும். இதனை தொடர்ந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக வழக்கு பதிவு செய்து, உடனடியாக கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மேகதாது பகுதியில் விசாரிக்க நிபுணர் குழுவையும் அமைத்தது. பின்னர், மத்திய அரசின் வழக்கு நிலுவையில் இருப்பதால், திடீரென்று வழக்கை முடித்துள்ளது. இதனால் தற்போது தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து தமிழகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இணையவழியில் இன்று அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இக்கூட்டத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மேகதாது அணை குறித்த விவகாரத்தை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட கூட்டத்தை நடத்துமாறு தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து நாளை தமிழகத்தில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.