பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்!
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகளை தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகள் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆன போட்டிக்காக பஞ்சாப் குருகிராமுக்கு சென்று இருக்கிறார்கள். குருகாமில் யுனிவர்சிட்டிகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா யுனிவர்சிட்டி மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போட்டியின்போது நடுவர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் பாண்டி அளித்த புகாரை ஏற்றுக்கொள்ளாத பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.
இதனிடையே, பீகார் வீராங்கனைகள் அங்கிருந்து நாற்காலிகளை எடுத்து தமிழக வீராங்கனைகள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது… pic.twitter.com/IEfggEgBRr
— Raj Satyen – Say No To Drugs & Dmk (@satyenaiadmk) January 24, 2025